வெள்ளி, 17 ஜூன், 2016

கொசுப் பேச்சுக் கேட்கலாம் வாங்க...




அம்மா கொசு: செல்லம், மாடிவீட்டுப்பக்கம் மறந்துகூடப் போயிராதே...


குட்டிக்கொசு : ஏம்மா, அவங்கல்லாம் குட் நைட் கொளுத்துறவங்களா? 

அம்மா கொசு : இல்லடா, அந்த வீட்டுக்காரருக்கு கொரோனா வந்திருக்குதாம்!

                                                                  **********************

ராமு கொசு : நேத்திலேருந்து ஆளையே காணமே...எங்கடா போனே?

சோமு கொசு : கவுன்சிலர் வீட்டு ஏசி கார்ல கொஞ்சநேரம் கண்ணசந்துட்டேனா, அவங்க கூட பழனி வரைக்கும் போகவேண்டியதாப்போச்சு. சும்மா சொல்லக்கூடாதுடா, பழனிக் கொசுவெல்லாம் பக்தர்களைக் கடிச்சுக்கடிச்சு, நம்மளைவிட ரொம்ப சௌக்கியமா ஸ்ட்ராங்கா இருக்குதுங்க.

*********************


கணவன் கொசு: பிள்ளைங்களும் நானும் தொழிலுக்குப் போகும்போது முகத்தைச் சோகமா வச்சிட்டு உட்கார்ந்திருக்காதேன்னு எத்தனை நாள் சொல்றது?

மனவி கொசு : உங்களுக்கென்ன, யாரை வேணுன்னாலும் கடிக்கலாம், எந்த ரத்தத்தை வேணுன்னாலும் குடிக்கலாம். சர்க்கரை வியாதி வந்ததுலேருந்து பத்திய ரத்தம் தேடித்தேடி, எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கு. 

**********************

அண்ணன் கொசு : விடிஞ்சும் விடியாமலும் வெளியில புறப்பட்டுட்டியே, என்னடா வேலை?

தம்பி கொசு : நம்ம ஊர் லயன்ஸ் கிளப் ல ரத்ததானம் பண்றாங்களாம். ரகரகமா ரத்தமெல்லாம் ஒரே இடத்துல கிடைச்சா வேணாம்னா சொல்லுவாங்க, அதான்...

**********************

கொசு கமலா : அந்த கோழிப்பண்ணைக் கொசுவோட கொஞ்சிக்கிட்டுத் திரியாதேன்னு எத்தனைநாள் சொல்றேன்?

கொசு விமலா : ஏண்டி, உனக்கென்ன பொறாமை?

கொசு கமலா : பொறாமையா, அடிபோடீ... பறவைக்காய்ச்சல் வந்திச்சுன்னா, யாரும் பக்கத்துலகூட வரமாட்டாங்க, பாத்துக்கோ...

***********************

மனைவி கொசு(அலைபேசியில்) : ஏங்க, கோயிலூர் பக்கம் இலவசமா கொசு மருந்தடிக்கிற வண்டி வந்திருக்காம். அந்தப் பக்கம் போயிராதீங்க.

கணவன் கொசு : அடிப்போடி இவளே...காலைலேருந்து அந்தக் கொசு மருந்து வண்டியிலதான் உக்காந்திருக்கேன். கொஞ்சம் புகைமூட்டமா இருக்கு, மத்தபடி ஒண்ணும் ஆகல.                                                                                                                                                                                                                                                                     :):):):):)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக